கோணங்கி விவகாரம்
இணையத்தில் கோணங்கி பேசுபொருளாகியிருக்கிறார், மிகவும் மோசமான வழியில்.. எனக்குக் கோணங்கியையே அவரது அமைப்பையோ தெரியாது.. கோணங்கியை நான் வாசித்ததுமில்லை... ஆயினும், கோணங்கி விவகாரம் உண்மையெனில், தன்னை, தன் சிந்தையைச் சீர் செய்யும் நோக்குடன், இலக்கியத்தின் பால் திரும்பும், இள ரத்தங்களை தவறாகப் பயன்படுத்தி திசை திருப்புவது கண்டனத்துக்குரியது..
I think, going forward,
இலக்கியத்தின் பால் திரும்புபவர்களின் கவனத்திற்கென்று Do's and Don'ts போல சில படிப்பினைகளை முன்மொழியக்கூடிய இடத்திற்கு நாம் வந்துவிட்டோம் என்றே நினைக்கிறேன்.
1. கோணங்கி போல் இள ரத்தங்களை பாலியலின் பக்கம் திசை திருப்பி காயடிப்பது ஒரு புறம்.
2. இதே காயடிப்பதை அமைப்பு ரீதியிலும் சிலர் செய்கிறார்கள்.. சில அமைப்புகளில் ஒரு பொதுவான ஒழுங்கைக் காண இயலும்...
அமைப்பு லாப நோக்கற்ற ஒன்று என்று தன்னைப் பறைசாற்றிக்கொள்ளும். இங்கு தான் எல்லா பிரச்சனைகளும் துவங்குகிறது. லாப நோக்கு இல்லை என்பதால், யாருக்கும் ஊதியம் இல்லை. ஆனாலும் அமைப்பை நடத்த மனித ஆற்றல் தேவைப்படுகிறதே? அதற்கு என்ன வழி?
volunteering
இதுதான் வழி. இந்த volunteering ஐயும் unconditional ஆகச் செய்ய யாருக்கும் ஆர்வமில்லை. volunteering என்பது ஒரு சொல்லாடல் மட்டுமே. மற்றபடி, volunteering செய்பவர்கள், தங்களை promote செய்து கொள்ளும் நோக்கத்தில் தான் இதற்குள் வருகிறார்கள்.. அமைப்புக்கான, சஞ்சிகைகள், நிகழ்ச்சிகள் போட்டிகள் என அனைத்தையும் வாரி எடுத்துச் செய்கிறார்கள். அதற்கெல்லாம் மிகப்பல மணித்தியாலங்கள் செலவிடுகிறார்கள். அதெல்லாம் சரிதான்.. ஆனால் இதற்கெல்லாம் இலக்கிய அறிவு தேவை அல்லவா? அங்கு தான் பிரச்சனை.
தங்களுக்கு இருக்கும் கனிந்திடாத, முதிர்ந்திடாத எழுத்தையே 'இலக்கிய அறிவென்று' இவர்களே பிரகடனப்படுத்திக்கொண்டு விடுவார்கள்.. இதற்கு அமைப்பு ஏதும் சொல்வதில்லை.. ஏனெனில், அமைப்பை நடத்துபவர்கள் யாரும் இலக்கிய ஞானத்துடன் இருப்பதில்லை... இலக்கிய தரத்துடன் எழுதினால் இவர்களுக்குப் புரியவும் செய்யாது என்பதுதான் உண்மை... சரி, பார்வையாளனாவது ஏதாவது மறுதலிப்பானா என்று பார்த்தால் அதுவும் இல்லை... உண்மையில் அவனுக்கு இலக்கியம் குறித்தோ, இலக்கிய உலகம் குறித்தோ, வாசிப்பு குறித்தோ எவ்விதப் பார்வையோ, புரிதலோ இருக்காது...
சரி, இவர்களுக்கு நடுவில் இலக்கிய ஞானத்துடன் எவனாவது வந்தால் என்னாகும்? ஒன்றுமில்லை.. அவனை ஓரம் கட்ட இவர்களின் அஸ்திரம் volunteering hours தான்..
உதாரணமாக, இந்தக் கூட்டத்திற்குள் ஒரு புதுமைப்பித்தன் வருகிறார் என்று வைத்துக்கொள்வோம்.. புதுமைப்பித்தனும் இவர்களும் சந்திக்கும் சந்திப்புகளில் அடுத்தவர்களது ஆக்கங்களைப் புதுமைப்பித்தன் கண்டிப்பாகப் புகழ்ந்தே ஆக வேண்டும். அப்படிச் செய்தால், தான் பதிலுக்கு இவர்கள் புதுமைப்பித்தன் ஆக்கத்தை அதே அளவில் புகழ்வார்கள். புதுமைப்பித்தன் அங்கே இலக்கிய வாசம் தேடிவிட்டு ஒன்றும் அகப்படாததால் அமைதியாக இருந்தால், பதிலுக்கு அதே அமைதி புதுமைப்பித்தன் ஆக்கங்களுக்கும் அங்கேயே கிடைக்கும், சில கள்ள மெளனங்களுடனும், கள்ளச் சிரிப்புகளுடனும்.. புதுமைப்பித்தன்கள் இந்த இடத்தில் அமைப்பை விட்டு விலகிவிட்டால், குறைந்தபட்சம் அவர்கள் தங்களது மன அமைதியையாவது தக்க வைக்கலாம்.
இந்தப் புள்ளியில் வெளியேறாத புதுமைப்பித்தன்கள் அடுத்த கட்ட பிரச்சனைகளைச் சந்திக்க வேண்டும்.. உடன் அமைப்பில் இருக்கும் மற்றவர்கள் அமைப்புக்கு முன்பை விட அதிக நேரம் ஒதுக்கி volunteering ஐ intense ஆக்குவார்கள். ஏனெனில், இவர்களால் முடிந்ததும் அது ஒன்று தான்.. அதே அளவிலான volunteering ஐ புதுமைப்பித்தன் செய்தால் அவர் எங்கே இலக்கியம் படைப்பது? எல்லோருக்கும் இருப்பது 24 மணி நேரங்கள் தானே.. ஆக புதுமைப்பித்தனால் அத்தனை நேரம்volunteer செய்ய முடியாமல் போகும்.. அமைப்புக்கு, இலக்கிய ஞானமா தேவை? volunteering தானே தேவை.. ஆக, இவ்விதம் volunteer hours அதிகமாக்கியவர்கள் அமைப்புக்குள் பதவிகள் தந்து ஊக்குவிக்கப்படுவார்கள்... அடுத்த சந்திப்பில், இலக்கிய ஞானமே அற்ற ஒருவர் சொல்வதைச் செயல்படுத்துபவராக புதுமைப்பித்தன் மாற வேண்டி வரும்... அல்லது புதுமைப்பித்தன் முதுகின் பின்னால், குறை சொல்லத்துவங்குவார்கள்..அல்லது வேறொரு நகுலனை வரவழைத்து வேண்டுமென்றே நகுலனுக்கு முக்கியத்துவம் அளித்து புதுமைப்பித்தனை பழி வாங்க முயற்சிப்பார்கள்...
"என் உடல் பொருள் ஆவி அனைத்தும் தமிழுக்கே" என்ற கோஷத்தை அவர்கள் தன் தாய் மொழிக்காகச் சொல்லுவதில்லை என்பது இக்கணத்தில் தெள்ளத்தெளிவாக புரிந்துகொள்ளலாம்.. உண்மையில் இது போன்ற கோஷங்களை இவர்கள் ஒரு கருவியாகத்தான் பாவிக்கிறார்கள்.. அதன் நோக்கம், தன்னை promote செய்துகொள்வது மட்டுமே..
சரிப்பா... atleast இந்த வாய்ப்புக்களையெல்லாம் பயன்படுத்தி அவர்களாவது இலக்கியம் கற்கிறார்களா என்றால், அதுதான் இல்லை... ஆண்டுக்கணக்கில் துவங்கிய இடத்திலேயே நின்றுகொண்டிருப்பார்கள்.... இதை எளிதாக ஊர்ஜிதம் செய்யலாம்.. இவர்கள் யாரும் உள்ளூர் இலக்கிய இதழ்களான உயிர்மை, கணையாழி, காலச்சுவடு முதலான இலக்கிய இதழில் எழுதவே மாட்டார்கள்... ஏனெனில், 'படைப்பூக்கம் இல்லை', 'கற்பனை/சிந்தனை வரட்சி' என்றெல்லாம் இவர்களது ஆக்கங்களுக்கு சம்பந்தப்பட்ட இதழ்களிலிருந்து பதில்கள் வரும்.. அதையெல்லாம் இவர்கள் காதும் காதும் வைத்தாற்போல் முயற்சித்துப் பார்த்துவிட்டு, விட்டே விடுவார்கள்... இவர்களால் அதிகபட்சம் முடிவது சுத்தத்தமிழில் எழுதுவதாகவும், பிறமொழிக் கலப்பின்றி எழுதுவதாகவும் தான் இருக்கும்... பார்வையாளர்கள் ஏமாந்தால், அதையே தங்கள் இலக்கிய தகுதியாகச் சொல்லி establish செய்துகொண்டுவிடுவார்கள் . proof-readerகள் நூல்கள் வெளியிட்டு தங்களை சீரிய எழுத்தாளர்களாக நிறுவிக்கொள்வதெல்லாம் இந்த அமைப்புக்களில் சர்வ சாதாரணம்.
இவர்களிடம் பணம் இருக்கிறது... அதன் பின்னால், வரட்சி பாதித்த பதிப்பகங்கள் நிற்கின்றன... எவ்விதத் தர நிர்ணயமும் இன்றி இவர்கள் நூல்கள் வெளியிட்டுக்கொள்ள இந்தப் பதிப்பகங்கள் உதவும்.... அமைப்புக்களில் இவர்கள் செலவிட்ட volunteering hours க்கு ஈடாக அமைப்புக்கள் இவர்களை 'எழுத்தாளர்கள்' என்று மேடையேற்றி முன்மொழிந்து தங்கள் 'நன்றி நவிலலை' ஆற்றிக்கொள்கிறார்கள்.. அமைப்பில் பங்குபெற்ற எல்லோருக்கும் ஏதோ ஒரு வகையில் 'லாபம்'... இறுதியில் பார்வையாளன், வாசகன் தான் கேனை ஆவான்...
இந்த அமைப்புக்களை நம்பி, இவர்களை இலக்கியவாதிகள் என்று நம்பும் கூட்டத்தை நினைத்தால் தான் பாவமாக இருக்கும்... பணியிடம், வேலைச்சுமை போன்றவைகளை சீராக்கிவிட்டு, எஞ்சிய நேரத்தில் இலக்கியத்தின் பக்கம் முதன் முறையாகத் திரும்பும், இலக்கிய உலகுடன் எவ்விதப் பரிச்சயமோ, வாசிப்போ இல்லாத, ஆழ்ந்த புரிதல் இல்லாத கன்னி வாசகர்களே இவர்களது இலக்கு...
இப்படியாக வருபவர்கள் அனைவரும் தொடர்ச்சியாக ஏமாறுவதில்லை.. ஒரு கட்டத்தில் விவரம் தெரிய வருகையில், கோணங்கியால் பாலியலுக்கு திருப்பப்பட்டவர்கள் போலவே அவர்களும் 'ச்சீய்' என்று தங்கள் வாழ்க்கைக்குத் திரும்பிவிடுவார்கள்... இது ஒரு மோசமான முன்னுதாரணமாவது மட்டுமல்லாமல், அதன் பிறகு யாருமே இந்தப் பக்கம் வராமல் போகச் செய்துவிடுகிறது என்பது சோகமான உண்மை... இந்தப் புள்ளியிலும் விழிக்காதவர்கள், மிகச்சிறந்த 'அடிமைகளாக' ஆகிறார்கள்... அவர்களுக்கு ஆழ்ந்த அனுதாபங்கள்... வேறு யாரெல்லாம் இவர்களது இலக்கு? சலூன் கடைகள் போலத்தான்.. முடி கொட்டி வழுக்கை விழுந்தவர்களின் எண்ணிக்கைக்கு நிகராக, பதின்ம வயதில் அடியெடுத்து வைப்பவர்கள் ஒவ்வொரு வருடத்திலும் இருப்பார்கள் தான் அல்லவா? அது போல இலக்கியத்தின் பக்கம் முதன் முறையாகத் திரும்பும் கன்னி வாசகர்கள் ஒவ்வொரு வருடத்திலும் இருப்பார்கள் அல்லவா?
ஆக, தொடர்ந்து இவர்கள் தங்களைப் promote செய்துகொண்டே இருப்பார்கள்... இலக்கியம் வளர்ந்ததா என்றால் இல்லை...இவர்களாவது தங்களை வளர்த்துக்கொண்டார்களா என்றால் அதுவும் இல்லை...
ஆக, இவ்விதம் தான் பல இயக்கங்கள் இயங்குகின்றன... எழுத்தின் மீது தீராக்காதலுடன், எழுத்தை நேர்மையான வழியில், வளர்த்துக்கொள்ள வேண்டும் என்று நினைப்பவர்களுக்கு இவ்வமைப்புகளிலிருந்தெல்லாம் விலகி இருப்பதுதான் இருப்பதிலேயே இருக்கும் நல்ல உபாயம் என்பது என் வாதம்...
எல்லாமும் வணிக நோக்கமாகிவிட்ட இனி வரும் காலங்களிலும், இலக்கிய அமைப்புகள் இவ்விதம் இயங்கவே அதிகம் வாய்ப்பிருக்கிறது... ஆதலால் எழுத்தின் மீது ஈடுபாடு கொண்டு வரும் இளைஞ, இளைஞிகள் சூதனமாக நடந்துகொள்ள வேண்டும். அமைப்புகளை என்ன ஏதென்று கேளாமல் குருட்டாம்போக்கில் நம்பி இறங்கினால் கடும் சேதாரமாகவே வாய்ப்பதிகஃப்ம்...
போதிய தயாரிப்பு இல்லாமல், போதுமான அவதானம் இல்லாமல், குருட்டாம்போக்கில், உணர்ச்சி வசப்பட்ட மன நிலையில் எழுத்தை, கலை அமைப்புக்களை நம்பி அண்டுபவர்கள் மீது இந்த அமைப்புகள் எவ்விதச் சலுகையும், கருணையும் காட்டுதில்லை... இதுதான் இன்றைய இலக்கிய உலகின் நிலை...