நண்பர்கள் எல்லோருக்கும் காதலர் தின வாழ்த்துக்கள்...
முதலில் காதல் சோலை போடலாம் என்று தான் இருந்தேன். ஆனால், சமீப காலமாக நம்மைச் சுற்றி நடப்பதையெல்லாம் பார்த்தால், எல்லோருக்கும் பயன்படும் படியான சில பயனுள்ள குறிப்புகள் பகிர்வது பொறுத்தமாக இருக்குமென்று நம்புகிறேன்.
1. 96 ராம் போல எந்தப் பெண்/ஆண்க்காகவும் ஆண்டுக்கணக்கில் காத்திருக்காதீர்கள். அதிகபட்சமாக சில மாதங்கள். பேசிப்பாருங்கள். ஆர்வம் காட்டவில்லை என்றால் அடுத்த பெண்ணை/ஆணைப் பார்த்துப் போய்விடுங்கள். 96 ராம், பெண்ணை impress செய்ய வேலை வெட்டியெல்லாம் விட்டுவிட்டு தெருவில் காத்திருப்பது எல்லாம் சினிமாவில் வேண்டுமானால், பார்க்க அழகாக இருக்கலாம்.
2. கடந்த காதல்களை எக்காரணம் கொண்டும் திரும்பியும் பார்க்க வேண்டாம். அது நிகழ் காதல்களுக்கு இழைக்கும் அநீதி மட்டுமல்ல. அது உங்கள் தெளிவற்ற அணுகுமுறையையே காட்டும். அதுவே உங்களுக்கு பலவீனமாக அமையும்.
உதாரணமாக, நீங்கள் உங்கள் காதலைச் சொல்லியும் அந்தப் பெண்ணோ/பையனோ ஏற்காமல் போய்விட்ட பின், நீங்கள் திருமணம் செய்து settle ஆகிவிட்டீர்கள். இப்போது பழைய காதலை திரும்பியும் பார்க்காதீர்கள். பழைய காதலி/காதலன் குறித்த பேச்சு வந்தால் கூட 'நியாபகமே இல்லை' என்று அபாண்டமாகச் சொல்லக் கற்றுக்கொள்ளுங்கள். எது உங்களை, உங்கள் மதிப்பை காலத்தே உணரவில்லையோ, அது இருந்தால் என்ன, இறந்தால் என்ன?
3. Don't ever be someone's backup. இது இக்காலங்களில் அதிகம் நடக்கிறது. ஆண், பெண் என்று பாலின வேறுபாடு இன்றி அதிகம் பாதிக்கப்படுவதாகச் சொல்லக் கேட்கிறேன். யாருக்கும் இரண்டாவது தேர்வாக இருக்காதீர்கள். அது போல் ஒரு toxicity வேறு இல்லை.
4. Women empowerment என்பது தேவை தான். ஆனால், equality அதை விடவும் முக்கியத்துவம் வாய்ந்தது. வரதட்சணை ஆண்களிடம் கேட்கப்பட்டாலும், பெண்களிடம் கேட்கப்பட்டாலும் இரண்டுமே தவறு தான்.
5. No means No. இது ஆண்களுக்கும் பொறுந்தும். நீங்கள் வாழ்க்கையில் No சொன்னதே இல்லை என்றால், நிச்சயம் நீங்கள் சம நிலைப்பாட்டில் இல்லை என்று பொருள். இந்த நிலைப்பாட்டில் இருந்தபடி எந்த உறவையும் துவங்காதீர்கள். அது மகா மட்டமான விளைவுகளைத் தரவே வாய்ப்பிருக்கிறது.
6. உங்கள் நியாயமான கோரிக்கைகள் honor செய்யப்படவில்லை என்றால், அந்த உறவை நீங்கள் தலைமுழுகுவது தான் சரி. But, this has a catch. உங்களுக்கு தேவையானதெல்லாம் 'நியாயமான கோரிக்கை' என்றாகிவிடாது.
7. Trust your instincts. உங்கள் உள்ளுணர்வு சொல்வதைக் கவனியுங்கள். But, this also has a catch. உங்களுக்கு சமூகப் புரிதல் குறைவாக இருந்தால், உங்கள் உள்ளுணர்வும் தவறாக இருக்கவே வாய்ப்பதிகம். சமூகப் புரிதல்களை உருவாக்கும் நூல்களை ஏன் எல்லோரும் வாசிக்க வேண்டும் என்பதற்கான காரணங்களுள் ஒன்றாக இதைக் கொள்ளலாம்.
8. முதல் காதலுக்கு அவசரமே வேண்டாம். முடிந்தவரை நேரமெடுத்துக்கொள்ளுங்கள். முடிந்தவரை முதலாவது காதலை வெற்றியாக்க கடுமையாக முயலுங்கள். முதல் காதலுக்கு எந்த அளவுக்கு நேரமெடுத்துக்கொள்கிறீர்களோ அந்த அளவிற்கு அது நிலைக்க வாய்ப்பு மிகுக்கும்.
9. செயற்கைத்தனம் வேலை செய்யவே செய்யாது. உங்கள் அசல் முகத்தைப் பார்த்து வரும் காதலே நிலைக்கும். ஏமாற்றத்தில் துவங்கும் உறவுக்கென நீங்கள் தான் வாழ் நாள் முழுவதும் மெனக்கெடுவதைப் போலாகும்.
10. அதிர்ஷ்டம் பெரும்பாலும் சோகத்தைத் தரவே வாய்ப்பதிகம். உங்கள் தகுதிக்கேற்ப ஆசைப்படுவதும், ஏற்பதுமே பாதுகாப்பானதாகும். அதிர்ஷ்டத்தின் பெயரால் ஒன்றை ஏற்றுக்கொண்டால் பின் அதைத் தக்க வைக்க வாழ் நாள் முழுவதும் நீங்கள் போராட வேண்டி இருக்கும்.
இனி வருவதுதான் பிரம்மாஸ்திரம்.
11. Expect the unexpected. நீங்கள் (ஆணோ/பெண்ணோ) நல்லவர் என்றால் நீங்கள் ஏமாற்றப்படவே வாய்ப்பதிகம். அப்படிப்பட்ட சூழலில், குறைந்தபட்சம் விவாகரத்தை normalize செய்வது குறித்து தெளிவான பார்வை கொண்டவராக இருப்பது நலம். அப்போதுதான் உங்களை ஏமாற்ற யாருக்கும் தைரியம் வராது. இந்தப் பின்னணியில், pre-nup பற்றி தெரிந்துகொள்ளுங்கள். நீங்கள் நல்லவராக இருக்கும்பட்சத்தில், இந்த அணுகுமுறை தான் இந்தக் காலத்தில், உங்கள் வாழ்க்கை சிறக்க உதவும்.