திட்டம்
எனக்கு காலையில் ஐந்தரை மணிக்கு மேல் தூக்கம் வருவதில்லை. இன்சோம்னியா என்றெல்லாம் இல்லை.
அதனால், காலையில் ஆறரைக்கெல்லாம் அலுவலகம் வந்துவிட முடிகிறது. அலுவலகம் வந்தவுடம் முதல் 20 நிமிடங்களுக்கு செய்தித்தாள் மேய முடிகிறது. தினமலர், தினமணி இணையத்தில் பார்க்கக் கிடைக்கிறது. பிறகு அலுவலக வேலைகள் மாலை மூன்றரை மணி வரையிலும். செப்டம்பர் 2014ல் அமேரிக்கா வந்த நாளில் இருந்து, இன்று வரை இதே தான். ஆறரைக்கெல்லாம் அலுவலகம் வந்து விடுவதால் மாலை மூன்றரைக்கெல்லாம் ஷட்டரை இறக்கிவிட்டு, ஜூட் தான்.
இதனால் நிறைய நேரம் கிடைக்கிறது.
நாலறைக்கு ஜிம் போனால் ஒன்றரை மணி நேரம் ஜிம்மில் இருக்கலாம். தடுக்கி விழுந்தால் Sandy Springs. அங்கே இருக்கிறது LA Fitness. அமேரிக்காவில் இது ஒரு ஜிம் சங்கிலி. இதே பெயரில் அமேரிக்க முழுமைக்கும் ஆங்காங்கே வைத்திருக்கிறார்கள். ஒரு இடத்தில் சேர்ந்துவிட்டால், அதே ஐடி கார்டை வைத்து, அமேரிக்காவின் எந்த மூலைக்கு போக நேர்ந்தாலும் அங்கே அருகாமையில் இருக்கிற ஒன்றில் நுழைந்துவிடலாம்.
உடை மாற்ற தனி அறைகளுடன் கூடிய பாத்ரூம், நீச்சல் குளம், கூடைப்பந்து, ஏரோபிக்ஸ், சைக்ளிங் என்று ஏகத்துக்கும் வைத்திருக்கிறார்கள்.
நாலரை மணிக்கு ஜிம் செல்வதில் ஒரு செளகர்யம் இருக்கிறது.
ஆறடி உயரத்தில், கூர்மையான மூக்கு, நீள்வாக்கில் முகம், சிறிய இதழ்கள் என்று ஒரு அமேரிக்க பெண் ஜிம்முக்கு வருவாள்.. Cross Breed மோகத்தில் பரிசோதனைக்கூடத்தில் Penelope Cruz ஐயும், Maria Sharapova வையும் சேர்த்து பிசைந்து செய்துவிட்டார்களோ என்று தோன்றும் அளவுக்கு இருப்பாள். எட்ட நின்று வேடிக்கை பார்த்தபடி நம் வேலையை செய்யலாம். அதென்னமோ, இது மாதிரி மாடல்களை பார்த்துக்கொண்டே செய்தால் நேரம் போவதே தெரிவதில்லை. பின்வரும் அத்தனையையும் ஒவ்வொன்றும் தலா இரண்டு செட்கள் என்று ஒன்றரை மணி நேரத்தில் கவர் செய்ய முடிகிறது என்றால் பார்த்துக்கொள்ளுங்கள்.
Low back extension, unilateral row,bench press, torso rotation, dual pulley row, chin dip assist, dual pulley pull down, free motion row, seated row, seated leg press, incline press, vertical chest, hammer strength decline press, pec fly, chest press, kneeling leg curl, seated leg curl, leg extension, standing calf, prone leg curl, glute machine, triceps extennsion, seated dip, overhead tricep, abdominal crunch, isi lateral row, low row, isolayeral wide chest, incline press, decline press, hammer strength, ground base squat
இப்படி சொல்வதால் "நட்புக்காக" சிமரன் - சரத் ரேஞ்சுக்கு இருக்குமென்று நீங்கள் கற்பனை செய்தால் அதற்கெல்லாம் நான் பொறுப்பல்ல..
அந்த அமேரிக்க Cross Breed க்கு ஒரு பாய் ஃப்ரண்டு இருக்கிறான். ஆர்மியில் காலை உடைத்துக்கொண்டவன். விந்தி விந்திதான் நடக்கிறான். அவளுடன் அவனும் வருவான். இருவரும் சேர்ந்தே தான் உடற்பயிற்சி செய்கிறார்கள். இந்த இணைப்பு தான் கண்கொள்ளாக் காட்சியாக இருக்கிறது.
ஆங்...ஆர்மி என்றவுடன் நினைவுக்கு வருகிறது. ஒரு நாள் நான் பயணித்த Uber ஓட்டியது ஒரு பழைய ஆர்மிக்காரன் தான். Trinidad ஐ சேர்ந்தவன். அவன் வாயை கிண்டியதில் நிறைய தகவல்கள் கிடைத்தன. இந்த ஊரில் ஆர்மியில் வேலை பார்த்தால் அவ்வளவு சலுகைகள் வசதிகள் தருகிறார்கள்.. அதற்கெனவே ஆர்மியில் வாலன்டியராக சேர்பவர்கள் இங்கே அதிகம்.. அது பற்றி வேறோரு சமயம் எழுதுகிறேன். திட்டம் பற்றி திட்டமிட்டதில் ஆர்மி பத்தி உள்ளே நுழைந்துவிட்டது பாருங்கள்!!...
நம்மூரில் ஜெனிலியா போல் பெண் இருந்தால், அவளது பாய் ஃப்ரண்டு கரிக்கட்டை போல் இருப்பான் . இவள் எலக்ரட்ரானிக்ஸும், கம்ப்யூட்டரும் படித்தால், அவன் ஹோட்டல் வேலையும், பகுதி நேரமாக ஜிம்மில் ட்ரெயினராகவும் இருப்பான். இந்த இணைப்பை எல்லாம் புரிந்துகொள்ளவே முடியாதது போல் இருக்கும்.
கொசுறு செய்தி: சமீபமாக 19 வயதான, ஒரு பொறியியல் கல்லூரியில் பொறியியல் படிக்கும் ஒரு நடிகரின் சகோதரி மகள், தான் சென்று வந்த ஜிம் ட்ரெயினருடன் ஓடிப்போய் போலீஸில் சரணடைந்திருக்கிறார். காதலர்களை காப்பாற்ற வேண்டுமாம். நடிகர் மாமனிடமிருந்து காப்பாற்ற வேண்டுமாம். அந்த காதலர் ஜிம் ட்ரெயினராக இருப்பதுடன்,ஹோட்டல் ஒன்றில் சப்ளையராகவும் வேலை செய்கிறாராம். வாழ்க காதல்!!!
ஆனால் இந்த Cross Breed ஐ புரிந்துகொள்ள முடிகிறது. ஒரே விதமான ஆர்வங்கள். பார்க்கப்போனால், இங்கே அமேரிக்காவில் ஜோடியாக பார்க்க முடிகின்ற எல்லாரிடமும் பெரும்பாலும் ஒன்றுக்கு மேற்பட்ட ஒற்றுமைகளை பார்க்க முடிகிறது.
இந்த பின்னணியில் இந்த தேசத்தால் மட்டும் எப்படி ஒவ்வொரு ஒலிம்பிக்கிலும் சர்வ சாதாரணமாக 60 தங்கங்கள் உளபட இரு நூற்று சொச்சம் பதக்கங்கள் வெல்லமுடிகிறது என்பதை புரிந்துகொள்ள முடிகிறது.
நம்மூரில் என்றால் " நீ எவ்ளோ பெரிய ஆளா வேணா இரு.. ஒரு பொண்ணுக்கு உன்னை புடிக்கணும்.. காதலுக்கு கண் இல்லை பாஸ்.. எதையுமே பார்க்காம வரதுதான் காதல்" என்றெல்லாம் வண்டி வண்டியாக பேசி வெறுப்பேற்றுவார்கள். நாட்டின் பெரும்பான்மை குற்றவாளிகள் அத்தனை பேருக்கும் மனைவி என்று ஒரு பெண் இருப்பதும், அவர்களுள் மிகப்பலருக்கு கள்ளக்காதலிகள் இருப்பதுவும், நாடு முழுவதும் அறியப்பட்ட பல புகழ்பெற்ற இந்தியர்களான சல்மான் கான், கரன் ஜொஹர், மிலிந்த் சோமன், அப்துல் கலாம் போன்றவர்கள் தனியர்கள் என்பதையும் இங்கு யார் கண்ணுக்கும் பிரதானமாக தெரிவது போல் தெரியவில்லை. நிர்பயா கேஸில் முக்கிய குற்றவாளியான ராம்சிங்கிலிருந்து, சமீபத்தில் கைதான பங்களூரின் கோகுல் வரையான எல்லாருக்கும் மனைவி, கள்ளக்காதலி இருந்தார்கள் என்பதெல்லாம், இந்த இந்திய தேசத்தை பொறுத்தவரை வெறும் செய்திகளே.
ஒலிம்பிக் வந்தால் ஒட்டுமொத்த 180 கோடி மக்களின் மானமும் கப்பலேறுவதைக் கூட கலாய்த்துவிட்டு போவார்கள்.. அமேரிக்கா அமேரிக்காவாக இருப்பதற்கும், இந்தியா இந்தியாவாக இருப்பதற்கும் வலுவான காரணங்கள் இருக்கின்றன...
எதையோ பேசத்துவங்கிவிட்டு எங்கேயோ வந்துவிட்டேன் பாருங்கள்!!!
ஜிம் முடித்ததும் ரூமுக்கு வந்தால், எழுதிக்கொண்டிருக்கும் புதிய நாவலுக்கு புதியதாக எதையேனும் கிறுக்குவதிலும், ஏற்கனவே கிறுக்கியதை சரி பார்ப்பதிலும் இரவு எட்டாகிவிடுகிறது. அப்புறமென்ன, மறு நாள் மதிய உணவுக்கு தயார் செய்து இரவே ஃப்ரிட்ஜில் வைத்துவிட்டு, ஒரு கோப்பை பால் குடித்தால் மணி 9 ஆகிவிடுகிறது. அதோடு எனது நாளும் முடிந்துவிடுகிறது. படுக்கப்போய்விடுவேன்.
மொத்தத்தில் ஒவ்வொரு நாளின் நேரக்கழிதலிலும் ஒரு ஒழுங்கு இருக்கிறது. ஒரு திட்டம் இருக்கிறது. இதனால் பல விஷயங்களை ஒருங்கிணைக்க முடிகிறது. ரொட்டீன் என்றெல்லாம் இல்லை. நேரம் கிடைக்கையிலெல்லாம், அறையில் தங்காமல், கோயில், ட்ரக்கிங், சினிமா, ஷாப்பிங் என்று அறை நண்பர்களுடன் போய்வருவதும் உணடு.
அர்த்தமுள்ள வாழ்க்கையை வாழ்வது தானே நம் எல்லோரின் குறிக்கோளாக இருக்க வேண்டும்
திட்டமிடுதல் பலவகையிலும் பலனளிக்கிறது. நிறைய Productive ஆக இருக்க முடிகிறது.
வழி மாறி போவதற்கும், திசை மாறி போவதற்கும் மிகப்பல விஷயங்கள் இருக்கும் அமேரிக்கா போன்ற நாடுகளில் இந்த திட்டமிடல் நம்மை கட்டுக்குள் வைக்கிறதாக நான் எண்ணுகிறேன்.
ஏதோ நண்பர்களுடன் போனோம், வந்தோம், ஏதேதோ அர்த்தமில்லாமல் என்ன பேசுகிறோம் என்பது கூட தெரியாமல் பேசினோம்.. நான்கைந்து புகைப்படங்கள் எடுத்து முக நூலில் பகிர்ந்தோம் இலக்கின்றி நாட்களை கடத்தினோம், திரும்பி பார்த்தால் ஒரு வருடத்தில் என்னென்ன செய்தோம் என்று குறிப்பிட்டு சொல்ல முடியாமல் திணறினோம் என்றில்லாமல், ஒவ்வொரு நாளுக்கும் ஒரு அர்த்தம் கூடுகிறது.. சார்த்தர் சொல்லும் ஒரு Essence கிடைக்கிறது...
எல்லாவற்றிலும் ஒரு ஒழுங்கு இருக்கிறது. அடைய ஒரு இலக்கு இருக்கிறது. அது அர்த்தமுள்ளதாக இருக்கிறது. அதற்கும் நம் ஒவ்வொரு நாளுக்கும் இருக்கும் தொடர்பை அவதானிக்க முடிகிறது. ஆதலால், கறை மட்டும்தான் நல்லது என்றில்லை ஐயா... திட்டமும் நல்லதுதான்....