என் ஆக்கங்கள் மீதான விமர்சனங்கள்

பிரபஞ்சத்தின் தினசரி டி.என்.ஏ குறிப்புகள்

Saturday, 24 January 2026

'விண்மீன்' இதழில் எனது இரண்டு கவிதைகள்

ஐக்கிய அரபு அமீரகத்திலிருந்து இயங்கும் காலாக்ஸி பதிப்பகத்தின் மாத இதழான 'விண்மீன்' இதழில் எனது இரண்டு கவிதைகள் வெளியாகியிருக்கின்றன. 

எனது கவிதைகளைத் தெரிவு செய்து வெளியிட்ட விண்மீன் இதழ் ஆசிரியர் குழுவுக்கு எனது நன்றிகளை உரித்தாக்குகிறேன்.



 

Wednesday, 14 January 2026

என் கல்லூரி மாணவர்களிடையே பேச இருக்கிறேன்.

 என் கல்லூரி மாணவர்களிடையே பேச இருக்கிறேன்.

2002ல் முடித்த பொறியியல் படிப்பு. 23 வருடங்கள் ஆகிறது. பொறியியல் படிக்கும் வரை, துரதிருஷ்டவசமாக, நல்ல நட்புகள் வாய்க்கவில்லை. வாய்த்த நட்புகளிடமும் போதிய புரிதல் இல்லை. இப்போது, இலக்கியம் பரிச்சமாகிவிட்ட பிறகு, இப்போதிருக்கும் முதிர்ச்சியுடன் யோசித்துப் பார்த்தால்,  முற்றிலும் வேறொருத்தனாக, அந்தக் கூட்டத்திற்கு,அந்த வளாகத்திற்குப் பொருந்தாத தகுதிகள் கொண்ட ஒருத்தனாக அப்போதே இருந்திருக்கிறேன் என்பது புரிகிறது.

அவர்களுக்கு என்னைப் 'பார்க்க'த் தெரியவில்லை. அவர்களுக்கு புரியும் விதமாய் 'விளக்க' எனக்கும் தெரிந்திருக்கவில்லை. இப்படி பல இல்லைகளோடு துவங்கி முடிந்த கல்லூரி வாழ்வு அது.

என் அனுபவங்களில் அவர்களுக்கு பாடங்கள் இருக்கலாம். அதைத்தான் பகிரப் போகிறேன்.

இந்த நிகழ்வை ஒருங்கிணைக்கும், ஜெரூசலேம் பொறியியல் கல்லூரி ஆசிரியர் பெருமக்கள் அனைவருக்கும் எனது நன்றிகள்.🙏🙏🙏




Monday, 12 January 2026

SFWA-Welcome

Where we end up together is important. It marks the point in time when our efforts have brought us all to a common point. That way, the first day at any organization is unique. Twenty-seven of us have come together from different corners of the world. There is only one thing connecting us all: Science Fictions!!"

ஓரிடத்தில் நாம் சென்று சேரும் தருணம் முக்கியமானது. காலத்தின் போக்கில், நம் முயற்சிகளின் விளைவுகள் நம்மை ஒரு புள்ளியில் நிறுத்திய தருணம் அது. ஆகையால், முதல் நாள் ஒவ்வொரு நிறுவனத்திலும் பிரத்தியேகமானது தான். இருபத்தி ஏழு பேர் சேர்ந்திருக்கிறோம், உலகின் வெவ்வேறு மூலையிலிருந்து. இணைப்பது ஒன்றே ஒன்று தான். அறிவியல் புனைவுகள்!!




 

Thursday, 8 January 2026

சிறுகதை அறிமுகம் - போர் - பாலாஜி பாஸ்கரன்

ஐக்கிய அரபு அமீரகத்திலிருந்து தமிழ் நூல்களைப் பதிப்பிக்கும் காலாக்ஸி பதிப்பகத்தின் நிறுவனர் திரு பாலாஜி பாஸ்கரன் அவர்கள்  வாசிப்பை, தமிழ் இலக்கியத்தை வளர்க்கும் நோக்குடன் தினம் தினம் ஒரு சிறுகதை என நூறு நாட்களுக்கு நூறு சிறுகதைகள் வாசிக்கிறார். 

அவர் நூல் அறிமுகம் செய்து விமர்சிக்கும் 52வது சிறுகதையாக, குவிகம் சிறுகதைப் போட்டியில் தேர்வான சிறுகதைகள் அடங்கிய காலாக்ஸி பதிப்பகம் வெளியிட்ட "தோப்பு"   தொகுப்பில் உள்ள எனது "போர்" சிறுகதை இடம்பெறுகிறது.


அவருக்கு எனது நன்றிகள். அவருடைய வாசிப்பை பின் வரும் சுட்டியில் காண்க:

https://www.youtube.com/watch?v=k0PH2oLK37g&t=3s




Wednesday, 7 January 2026

வாசகசாலை இணைய இதழ் 121ல் எனது சிறுகதை 'வேலை'

 


வாசகசாலை இணைய இதழ் 121ல் எனது சிறுகதை 'வேலை' வெளியாகியிருக்கிறது. சிறுகதையை இதழில் வாசிக்க பின்வரும் சுட்டியை சொடுக்கவும்.

https://vasagasalai.com/%e0%ae%b5%e0%af%87%e0%ae%b2%e0%af%88-%e0%ae%b0%e0%ae%be%e0%ae%ae%e0%af%8d%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%b0%e0%ae%9a%e0%ae%be%e0%ae%a4%e0%af%8d/

எனது சிறுகதையைத் தெரிவு செய்து வெளியிட்ட வாசகசாலை இணைய இதழ் ஆசிரியர் குழுவுக்கு எனது நெஞ்சார்ந்த நன்றிகளை உரித்தாக்குகிறேன்.

இன்றோடு, சென்னையில் புத்தகக் கண்காட்சி துவங்குகிறது. படைப்பு பதிப்பகம் ஸ்டால் 561ல் எனது அறிவியல் புனைவு மற்றும் கணிதப் புனைவு நூல்கள் கிடைக்கும்.


Saturday, 3 January 2026

49வது புத்தகக் கண்காட்சி - 2026ல் எனது நூல்கள்

எதிர்வரும் 2026 புத்தகக் கண்காட்சியில் எனது அறிவியல் புனைவு மற்றும் கணிதப் புனைவு நூல்கள் கிடைக்குமிடம்:

படைப்பு பதிப்பகம் ஸ்டால்: 561




8 ஜனவரி முதல் 21 ஜனவரி வரை, YMCA மைதானம், நந்தனம், சென்னை.


1. வாவ் சிக்னல் - விஞ்ஞானச் சிறுகதைகள்


தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித் துறையின் சிறந்த சிறுகதை நூல் - 2020 விருது பெற்ற முதல் அறிவியல் புனைவுச் சிறுகதை நூல்.


2. மரபணுக்கள் - விஞ்ஞானச் சிறுகதைகள்


மரபணுக்களை மையமாக வைத்துப் புனையப்பட்ட பத்து விஞ்ஞானச்சிறுகதைகள் தொகுதி.

2.அ. 'தழுவு கருவி'  - அரூ அறிவியல் புனைவுச் சிறுகதைப் போட்டியில் தேர்வான சிறுகதை.

2.ஆ. 'எப்போதும் பெண்' - கொலுசு சிறுகதைப் போட்டியில் பரிசு பெற்ற சிறுகதை.

2.இ. 'கண்ணாடிச் சுவர்' - குவிகம் சிறுகதைப் போட்டியில் பரிசு பெற்ற சிறுகதை.

2.ஈ. 'பிரதியெடுக்காதே' - இச்சிறுகதையின் ஆங்கில மொழிபெயர்ப்பான 'Mismatch' வார்த்தைக்கு எட்டு அமெரிக்க செண்ட் வீதம் விற்பனை ஆகி, அமெரிக்காவின் புகழ்பெற்ற Science Fiction and Fantasy writer's Associationல் இணை உறுப்பினர் அந்தஸ்தைப் பெற்றுத் தந்திருக்கிறது.

2.உ. 'சோஃபி' - இச்சிறுகதை எழுத்தாளர் திரு.சங்கர நாராயணன் தொகுத்த 'மாசறு பொன்'  தொகுதியில் இடம்பெற்றது. இதன் மற்றோரு வர்ஷனான, சோஃபியா ஜீரோ டிகிரி விருது பெற்றது குறிப்பிடத்தக்கது.


3. தீசஸின் கப்பல் - சிறார் விஞ்ஞானச் சிறுகதைகள்

'பூனையற்ற புன்னகை' சிறுகதையின் ஆங்கில மொழிபெயர்ப்பான 'Sensed Presence', Allegory Science Fiction, Fantasy, Horror Magazineல், 'Honorable Mention' அங்கீகாரம் தரப்பட்டிருக்கிறது.


4. கம்ப்யூட்டா - சிறார் கணிதச் சிறுகதைகள்


Banach-Tarski Paradox, Infinite Monkey Theorm, Thompson's Lamp Paradox முதலான சுமார் அரை டஜனுக்கும் மேலான கணிதக் கோட்பாடுகள் மற்றும் தேற்றங்களின் அடிப்படையில் உருவாக்கப்பட்ட பத்து சிறுகதைகள் அடங்கிய தொகுதி நூல். இந்திய மொழிகளிலேயே இருக்கும் முதல் கணிதச் சிறுகதைத் தொகுதி நூல் தமிழில் உள்ள இந்த நூல் மட்டுமே என்பது குறிப்பிடத்தக்கது.

4.அ. Infinite Monkey Theoremல் அமைந்த 'கூடை மனிதன்' சிறுகதையின் ஆங்கில மொழிபெயர்ப்பான 'The Bucket Man',  L.Ron Hubbard Writer's of the Future Contestல், 'Honorable Mention' அங்கீகாரம் தரப்பட்டிருக்கிறது.

4.ஆ. தொகுப்பின் முதல் சிறுகதையான,  Logarithm அடிப்படையிலான 'மடக்கை' சிறுகதையின் ஆங்கில மொழிபெயர்ப்பு ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த அறிவியல் புனைவிதழான AntipodeanSF ல் April 2026ல் வெளியாகத்தேர்வாகியிருக்கிறது.