என் ஆக்கங்கள் மீதான விமர்சனங்கள்

பிரபஞ்சத்தின் தினசரி டி.என்.ஏ குறிப்புகள்

Thursday, 15 February 2024

வாவ் சிக்னல் - தமிழக அரசு விருதை செய்தித்துறை அமைச்சர் திரு மு.பெ சாமிநாதன் அவர்களிடமிருந்து என் தந்தை பெற்றுக்கொண்டார்.

 12 பிப்ருவரி அதிகாலை என் அப்பா அனுப்பிய குறுஞ்செய்தியில் தான் எனது நூல் தமிழக அரசின் தமிழ் வளர்ச்சித்துறையின் 2020ம் வருடத்திற்கான சிறந்த சிறுகதை நூலுக்கான விருதுக்குத் தேர்வு செய்யப்பட்டிருப்பதே தெரிய வந்தது. 14ம் நாள் மாலை அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் வந்து விருதைப் பெற்றுக்கொள்ளும்படி என் தந்தைக்கு அலைபேசியில் தகவல் சொல்லியிருக்கிறார்கள். விருதை நேரில் சென்று பெற்றுக்கொள்ள விருப்பம் இருந்தாலும் இத்தனை குறுகிய கால இடைவெளியில் விமானப் பயணத்திற்கு நேரமே இல்லை என்பதால் அப்பா-அம்மாவையே எனக்கு பதிலாக விருது வாங்கிக்கொள்ள அனுப்பி வைக்க வேண்டியதாகிவிட்டது. கொஞ்சம் முன்னமேயே தெரிவித்திருக்கலாம் என்று தோன்றாமல் இல்லை தான். விருதை நேரில் பெற பெருவிருப்பம் இருந்தும் இயலாமல் போவது இது இரண்டாவது முறை: முதலாவது 2022க்கான ஜீரோ டிகிரி இலக்கிய விருது.

என் 'வாவ் சிக்னல்' நூலுக்கான தமிழக அரசின் தமிழ் வளர்ச்சித்துறையின் 2020ம் வருடத்திற்கான சிறந்த சிறுகதை நூலுக்கான விருதை செய்தித்துறை மற்றும் தமிழ்வளர்ச்சித் துறை அமைச்சர் திரு மு.பெ சாமிநாதன் அவர்களிடமிருந்து என் தந்தை என் சார்பில் பெற்றுக்கொண்டார்.
வாழ்த்திய அனைத்து நண்பர்களுக்கும் நன்றிகள்...



Tuesday, 13 February 2024

வாவ் சிக்னல் - தமிழக அரசின் சிறந்த சிறுகதை நூலுக்கான விருது (2020) பெறுகிறது

 வாவ் சிக்னல் - தமிழக அரசின் சிறந்த சிறுகதை நூலுக்கான விருது (2020) பெறுகிறது

*******************************************************
எனது 'வாவ் சிக்னல்' விஞ்ஞானச் சிறுகதைத் தொகுதி நூல், தமிழக அரசின் தமிழ் வளர்ச்சித்துறையின் 2020ம் வருடத்திற்கான சிறந்த சிறுகதை நூலாகத் தேர்வாகியிருக்கிறது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறேன்.
எனது இந்த அறிபுனைச் சிறுகதைத் தொகுதிக்கு மாநில அரசின் விருது கிடைத்திருப்பது மட்டட்ட மகிழ்ச்சியையும், மென்மேலும் தீவிரமாக இயங்க உத்வேகத்தையும் தருகிறது.
மாநில அரசு விருதாளர்களின் பட்டியலில் இணையச்செய்ததில் மாநில அரசுக்கும், தேர்வுக்குழுவுக்கும், இந்த இயற்கைக்கும் எனது நன்றிகளை உரித்தாக்குகிறேன். 🙏🙏🙏
விருதுக்கென எனது நூல் அனுப்பப்பட்டதே எனக்குத் தெரியாது என்பதையும் இங்கே குறிப்பிட விரும்புகிறேன். விருதுக்கென என் நூலை அனுப்பி வைத்ததற்கு ஒரு பதிப்பாளரின் கடமை உணர்வுடன் அனுப்பி வைத்த பதிப்பாளர் ஜின்னா அவர்களுக்கு எனது பிரத்தியேக நன்றிகள்.🙏🙏🙏
All reactions:
Kamaraj M Radhakrishnan, Rajesh Vairapandian and 16 others

Sunday, 11 February 2024

சரோஜாதேவி புத்தகம் - அறிபுனைச் சிறுகதை - சொல்வனம்

 சொல்வனம் 312வது இதழில் எனது அறிபுனைச் சிறுகதை 'சரோஜாதேவி புத்தகம்' வெளியாகியிருக்கிறது.

சொல்வனம் இதழ் ஆசிரியர் குழுவுக்கு நன்றிகள்...
சிறுகதையை சொல்வனம் இதழில் வாசிக்க, பின்வரும் சுட்டியைச் சொடுக்கவும்.







Thursday, 1 February 2024

அட்சயபாத்திரம் - சிறுகதை - வாசகசாலை

 வாசகசாலையின் இந்த வார இதழில் எனது சிறுகதை 'அட்சயபாத்திரம்' வெளியாகியிருக்கிறது. 

எனது சிறுகதையைத் தெரிவு செய்து வெளியிட்ட வாசகசாலை இதழ் ஆசிரியர் குழுவுக்கு எனது நன்றிகளை உரித்தாக்குகிறேன்.

சிறுகதையை வாசகசாலை இதழில் வாசிக்க, பின்வரும் சுட்டியைச் சொடுக்கவும்.

https://vasagasalai.com/atchayapathiram-sirukathai-ram-prasath-vasagasalai-88/

சிறுகதையை வாசித்துவிட்டுக் கருத்துக்களைப் பகிர்ந்துகொள்ளுமாறு நண்பர்களைக் கேட்டுக்கொள்கிறேன்.