💕💕 காதல் சோலை - 8 💕💕
Monday, 28 June 2021
💕💕 காதல் சோலை - 8 💕💕
Friday, 18 June 2021
அமெரிக்காவில் நடக்கும் புத்தகக் கண்காட்சி
அமெரிக்காவில் நடக்கும் புத்தகக் கண்காட்சி இது.
Wednesday, 2 June 2021
சரவணபவன் அண்ணாச்சி, வைரமுத்து விவகாரங்கள் நமக்கு சொல்வது என்ன?
சரவணபவன் அண்ணாச்சி, வைரமுத்து விவகாரங்கள் நமக்கு சொல்வது என்ன?...
There are better things to do... இதைத்தான் சொல்ல வேண்டி இருக்கிறது...
2008ல் லண்டனில் இறங்கியபோது தமிழ் நாட்டை நினைவூட்டியது சரவண பவன்... 2014ல் அமெரிக்கா வந்தால் இங்கும் அதே சரவண பவன்... சம காலத்தில், நம்மூர் உணவகம் அமெரிக்கா, ஐரோப்பா என்று விரிந்தது ஒரு மாபெரும் சாதனை... சானலுக்குச் சானல் தாவி பேட்டி கொடுக்க வேண்டியவர் சரவண பவன் அண்ணாச்சி.. கூடா நட்புகளால் புகழ் மங்கி கோர்ட் கேஸ் என்று அலைந்து அலைந்தே மரணித்தார். இந்த அலைச்சலில் தொழில் முனைவோருக்கான அற்புதமான பல ஆலோசனைகள் அந்தப் பேட்டிகள் வாயிலாக தமிழர்களுக்கு கிடைக்காமல் போனது.
நான் வைரமுத்து ஆதரவாளனும் இல்லை, எதிர்பாளனும் இல்லை.. ஆயினும், வைரமுத்து விவகாரத்தில் உண்மை எது என்பது தெளிவில்லாமல் இருக்கிறது. ஒரு பெண் ட்விட்டரில் அதுவும் பல ஆண்டுகள் கழித்து குற்றம் சாட்டிவிட்டார் என்பதற்காக அதை நம்புவதற்கில்லை.. எதையும், யாரையும், தகுந்த நிரூபணங்கள், தரவுகள் இல்லாமல் நம்ப முடியாத காலகட்டத்தில் தான் வாழ்ந்துகொண்டிருக்கிறோம்... இப்படித்தான் ராம் குமார் என்றொரு பையனை குற்றம் சாட்டினார்கள்... ஸ்வாதி கேஸ் சந்திக்காத பெண்ணியவாதிகளின் எதிர்ப்பே இல்லை எனலாம்.. ஒட்டுமொத்த பெண்ணியவாதிகளும் கொந்தளித்தார்கள்... ஆனால், ராம் குமார் மரணம் இனி எப்போதைக்குமான conspiracy. இதை யாரும் மறுக்க இயலாது..
ஆக, எதுவும் நிரூபனமாகாதவரை யாரையும் குற்றவாளியாக்க முடியாது, கூடாது என்பது என் வாதம்.. DOT.
இந்த பின்னணியில், ஆண்களுக்கு சில வார்த்தைகள்...
There are better things to do guys.
உங்கள் தினசரி நேரச்செலவினங்களில் தன்னிறைவு அடைந்ததன் பலனாகப் போதுமான பொருளாதார சுதந்திரம் பெற்றுவிட்டீர்கள் எனில், there are better things to do.. செய்வதற்கு எத்தனையோ நல்ல காரியங்கள் இருக்கின்றன... உதாரணமாக, gym, நடனம், பல மொழிகள் கற்பது, இசை கற்பது இப்படி...ஹோட்டல் நிர்மானித்து சாதனை செய்துவிட்டீர்களெனில், மொழிகள் கற்கலாம்... பல நாடுகளில் வாணிபத்தை விரிவாக்க உதவும்... பாடலாசிரியராக வென்றுவீட்டீர்களெனில், இசை கற்கலாம்.. இசைக்கேற்ப பாடல் என்று வேறொரு தளத்தில் பல்துறை வித்தகராக உதவும்...
GYM உடலின் இந்திரியங்களை சேமிக்கவும், சரியான வழியில் பயன்படுத்தவும், உடல் ரீதியிலான ஆற்றலின் உச்சபட்ச சாத்தியங்களை explore செய்யவும் உதவும். அது தரும் ஆனந்தமும், தன்னம்பிக்கையும் பேரின்பத்தைச் சேர்ந்தது.. சிற்றின்பங்களால் எக்காலமும் தர இயலாதது என்பது என் வாதம்...
நம்பிக்கையான உறவுகள் இனி வாய்க்காது என்ற நம்பிக்கையின்மையை விதைப்பது என் நோக்கமல்ல... ஆனால், நல்ல நம்பிக்கையான உறவுகள் அமைவது வரம் மட்டுமல்ல, அரிதான நிகழ்வும் கூட.. அதையும் மீறி, உங்களுக்கு அப்படியான நம்பிக்கையான உறவு எளிதாக வாய்த்துவிட்டதென்று தோன்றினால் உங்கள் முடிவை மறுபரிசீலனை செய்து பாருங்கள்... ஒருவேளை, அதுகாறும் உங்கள் கண்களில் படாத ஒன்று உங்களுக்குப் படலாம்... உங்கள் நம்பிக்கை அவநம்பிக்கையாக தெரியத்துவங்கலாம்... ஒரே ஒரு மறுபரிசீலனையைச் செய்யத் தவறி வாழ் நாள் புதைகுழிக்குள் விழாதீர்கள் என்பது என் பரிந்துரை...
எல்லாவற்றையும் விட ஒன்றைக் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டும்.. அது, எல்லோருக்கும் எல்லாமும் கிடைப்பதில்லை... நல்ல குடும்பம் வாய்த்தவர்களுக்கு நல்ல ஊதியம் தரும் வேலை வாய்க்காது.. இரண்டும் வாய்ப்பவர்களுக்கு அதை அனுபவிக்க நல்ல உடல் ஆரோக்கியம் வாய்க்காது.. கையில் நயா பைசா இருக்காது.. ஆனால், நாங்கு குழந்தைகள் இருக்கும்... வங்கியில் லட்சக்கணக்கில் சேமிப்பு இருக்கும்... திருமணமாகி இருபதாண்டுகள் கழித்தும் பிள்ளை இருக்காது...
இப்படி எல்லோருக்கும் எல்லாமும் வாய்ப்பதில்லை.. எல்லாமும் குறையாக இருந்தால் எதிலாவது நிறைவாக இருக்கும்.. எல்லாமும் நிறைவாக இருந்தால், எதிலாவது குறை இருக்கும்... இது தான் நிதர்சனமும் கூட.. இந்தப் பிரபஞ்சமே இப்படித்தான் இயங்குகிறது என்னும் போது, அதற்கேற்ப நம்மை, நம் புரிதல்களை, இயக்கங்களை தகவமைத்துக்கொள்வது நம் வாழ்வை எளிதாக்கும்.. இல்லையெனில் சிக்கல் தான்...
உறவுகளை உருவாக்க நேரமெடுத்துக்கொள்ளுங்கள்... இந்தக் காலத்தில் பொருண்மை லாபங்களுக்காக உருவாக்கப்படும் synthetic உறவுகளே அதிகம்... எல்லாவற்றிலும் ஒரு லாபத்தைக் கோருபவர்கள் நச்சுக்கு சமானம்.. ' நீ எனக்கு இதைச் செய், பதிலுக்கு நான் உனக்கு அதைச் செய்கிறேன்.. இரண்டு பக்கமும் லாபம்' என்பது தான் நச்சு உறவுகளுக்கான அடிப்படை மதிப்பீடு என்பதைப் புரிந்துகொள்ளுங்கள்..
இதை எளிதாக உணரலாம்.. நீங்கள் அறத்தின் வழி நடப்பவராக, உங்களுக்குள் தன்னிறைவு அடைந்தவராக, கூடிய மட்டும் பிற எவரிடமும் எதற்கும் அண்டி இருப்பவராக இல்லாமல் இருந்து பாருங்கள்.. உங்களின் நட்பை நாடியோ, அண்மையை நாடியோ எவரும் வர மாட்டார்கள்... ஏனெனில், அவர்களின் தேவைக்கு நீங்கள் இருப்பதில்லை.. உங்களால் அவர்களுக்கு எந்தப் பலனும் இல்லை... இதுதான் இன்றைய உலகம்... ஆக, லாப- நஷ்டக்கணக்கைப் பார்த்தே இன்றைய நட்புகள் உருவாகின்றன... இவனால் எனக்கென்ன ஆதாயம் என்கிற கணக்கு தான் இங்கு மிஞ்சுகிறது. இப்படி உருவாகும் நட்பு எண்ணம் ஈடேறாமால் போகையில் தெருவில் நிறுத்துவதில் ஆச்சர்யமில்லை தான்...
உண்மையில், மிகவும் நுணுக்கமாகப் பார்த்தீர்களானால், இது போன்ற உறவுகள் ஒரு trap போல் செயல்படுவதை அவதானிக்கலாம்.. இவர்கள் தாங்கள் முன்னேற வழியில்லை எனில் உங்களையும் முன்னேற விட மாட்டார்கள்.. அதை மீறி நீங்கள் அவர்களைக் கடந்து போகையில், தங்களை அதனில் திணித்துக்கொள்ள முயல்வார்கள்... அப்படி நடக்க வாய்ப்பில்லாதபோது, அதற்கு அசட்டுத்தனமான அர்த்தங்கள் கற்பித்துக்கொள்வார்கள். எதிர்மறை எண்ணங்கள் பரவக் காரணமாவார்கள்...
இந்த எதிர்பார்ப்பில் யார் அண்டி வந்தாலும், புறக்கணிக்கப் பழகிக்கொள்ளுங்கள்... . நல்ல உறவுகள் உருவாகக் கால அவகாசம் கோரும்.. புரிதல்கள் தேவைப்படும்... நம் அசலான நலம் விரும்பிகள், முச்சந்தியில் நிறுத்தி வேடிக்கை பார்க்கமாட்டார்கள்... நம்மை நமக்காக ஏற்றுக்கொள்வார்கள்... இருந்தால் அப்படி ஒரு உறவில் இருக்க வேண்டும்.. இல்லையென்றால் தனித்து இருத்தலே சாலச் சிறப்பு....