என் ஆக்கங்கள் மீதான விமர்சனங்கள்

பிரபஞ்சத்தின் தினசரி டி.என்.ஏ குறிப்புகள்

Monday 26 October 2020

உங்கள் எண் என்ன? - விமர்சனம் - Priya Baskaran

எழுத்தாளர் ராம்பிரசாத்தின் “ உங்கள் எண் என்ன “ என்ற நாவலை Amazon Kindle ல் வாசித்தேன். இவர் அமெரிக்கத் தமிழ் எழுத்தாளர் ஆவார்.

ஆரம்ப அத்தியாயத்தை வாசித்தவுடன், இதில் எங்கிருந்து எண்களைப் பற்றிச் சொல்லப் போகிறார், என நினைக்க வைத்தது. பிறகு கதைக்களம் ஒரு சில அத்தையாங்களைக் கடந்த பின் மாறுபட்ட தளத்தில் பயணிக்க ஆரம்பித்து என்னையும் உடன் இழுத்துச் சென்றது. அந்த கதைக்களத்துக்கு ஏற்ற முன் அத்தியாயங்களையும் அமைத்ததின் பின்னணியும் புரிந்தது.
திருமண உறவுகள் நிலைத்து இருக்க, துணை எப்படித் தேர்ந்தெடுக்க வேண்டும் என்பதை எண்களை வைத்து ஆழமான, வித்தியாசமான கதைக் களத்தை உருவாக்கி உள்ளார்.
முதலில் நம்முடைய தகுதிகள் என்ன என்பதைத் தெளிவாகத் தெரிந்து கொண்டு,
திருமண உறவுகள் நிலைத்து நிற்கத் துணையைத் தேர்ந்தெடுக்க
“Ram’s Organized Dependent Essence Chart - RODE” என்ற ஒரு chart ஐ அறிமுகப்படுத்தி, உலகம் எப்படி எண்களால் இயங்குகிறது என்பதையும், ஆண், பெண் உறவில் அப்படிப்பட்ட கணித எண்கள் எப்படி உறவைச் சமன் செய்கிறது என்பதையும் அற்புதமாக விளக்கியுள்ளார்.
உறவு நிலைத்து இருக்க அரத்தங்கள் முக்கியமானவையேத் தவிரத் தேர்வுகள், விருப்பங்கள் அல்ல என்பதைத் தெளிவாகச் சொல்லி இருக்கிறார். அதாவது அர்த்தங்கள்
என்பதை “ ஒரு conservative கடைசி வரை conservative ஆகத்தான் இருப்பார். ஒரு extrovert கடைசி வரை extrovert ஆகத்தான் இருப்பார். இதெல்லாம் மனநிலையோ, காலமோ மாறினாலும் மாறாதது” என்பதை விளக்கி இருக்கிறார்.
சிலர் ஜாதகப் பொருத்தம் பார்க்கிறார்கள்,
சிலர் எதனையும் பார்ப்பதில்லை. ஆனால்
இந்தக் கணிதப் பொருத்தம் எப்படி ஒரு பந்தத்தை நிரந்தரமாகத் தொய்வில்லாமல் தொடர உதவும் என்பதைக் காட்சிகளுடன், சூழ்நிலைகளுடன், அன்றாட நிகழ்வில் ஏற்படும் நிதர்சனத்துடன் கதையை நகர்த்திச் செல்லும் பாங்கு வெகு சிறப்பு.
ஒரு வேலைக்குப் போனாலே, முதல் சுற்று, இரண்டாம் சுற்று, இறுதிச் சுற்று என நேர்காணல் வைத்துத் தேர்ந்தெடுக்கப் படுகிறோம். எதனால்..? அந்த நிறுவனத்தின் வளர்ச்சிக்கு நாம் எவ்வாறு பங்களிக்க இயலும் என்று அறிவதற்காய். இந்த வேலை இல்லை என்றால் வேறு வேலை தேடிக்கொள்ளச் சந்தர்ப்பங்கள் இருக்கும் ஒரு பணிக்கே எவ்வளவு நாம் தயார்ப்படுத்திக் கொள்ளும் போது, இருப்பதே இந்த ஒரு பிறவி.
அதில் “ஒருவனுக்கு ஒருத்தி” என்ற நமது கலாச்சாரத் திருமண உறவில் ஏமாற்றம், சலிப்பு, மன உலைச்சல் இவற்றைத் தவிர்ந்து, இன்பமுடன், நிலையான, மெய்யான, உறவாய் நிலைத்திருக்க இந்த கணித எண் பொருத்தத்தைப் பெற்றோரால் ஏற்பாடு செய்த திருமணமானாலும், காதல் திருமணமானாலும் பின்பற்றிப் பார்ப்பதில்லை தவறில்லை
எனத் தோன்றுகிறது.
இந்த நாவல் வாழ்வியல் எதார்த்தங்களைப் படம் பிடித்துக் காண்பிக்கிறது. மிகவும் விறுவிறுப்பான அத்தியாயங்கள் அமைந்த அருமையான நாவல். அனைவரும் வாசிக்க வேண்டிய ஒரு நாவல். முக்கியமாகப் பெண்கள் குடும்பச் சுமை, பணிச்சுமை இரண்டிலும் சவாரி செய்ய வேண்டிய காலகட்டத்தில் சரியான துணையைத் தேர்ந்தெடுக்க வேண்டிய நிலையில் இருப்பவர்கள் அவசியம் வாசிக்க வேண்டிய ஒன்று என நினைக்கிறேன்.
மேலும் இந்த நாவல் University of Charleston ஐச்சேர்ந்த அமெரிக்க
கணிதவியாலர் Alex Kasman இந்த நூலைக் கணித நாவல் என்று அங்கீகரித்து கணித நூல்களுக்கான பட்டியலில் இணைத்திருக்கிறார்.
வித்தியாசமான கதை மற்றும் அருமையான ஒரு கணித chart ஐ கொடுத்த எழுத்தாளர் ராம்பிரசாத்திற்கு நன்றிகள் . மேன்மேலும் பல நாவல்களைப் படைக்க நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள்.