என் ஆக்கங்கள் மீதான விமர்சனங்கள்

பிரபஞ்சத்தின் தினசரி டி.என்.ஏ குறிப்புகள்

Sunday 13 January 2019

Emerald Publishers Stall in 42nd book festival, Chennai



மாதக்கணக்கில் தகவல்களை சேகரித்து, அவற்றை வகைப்படுத்தி, ஆராய்ந்து ஒரு தியரியை உருவாக்கி அதை ஒவ்வொரு வார்த்தையாக மாதக்கணக்கில் அமர்ந்து கோர்த்து, பிழை திருத்தம் செய்து  நாவலாக எழுதினால் ஒரு கண்டம் வரும். ஒரு பதிப்பாளர் அதை ஏற்றுக்கொள்ள வேண்டும். பதிப்பாள அங்கீகாரம் கிடைக்காமல், நாமாக வெளியிட்டுக்கொள்ள என்ன வழி என்று தேடி வெளியிட்டுக்கொள்ள இது அமெசான் கிண்டில் வெளியீடு அல்ல.

ஒரு பதிப்பாளர் இது நாவல் தான் என்று அங்கீகரிக்க வேண்டும். அந்த நூல் மேல் நம்பிக்கை வைக்க வேண்டும். அதை நூலாக வெளியிட முன்வர வேண்டும். இத்தனை மைல்கற்களுக்கும் பிறகு நம் 'கிறுக்கல்கள்' நூலாகி புத்தக திருவிழாவில் ஸ்டாலில் இடம்பெறுவதை காண கண் கோடி வேண்டும்.

கடைசியாக 2017 புத்தக கண்காட்சியில் பங்கேற்றது. 'உங்கள் எண் என்ன?' என்ற எனது இரண்டாவது நூலை வெளியிட்டிருந்தேன்.  புத்தக கண்காட்சியில் பங்குபெறுவதே ஒரு ஆனந்தம் தான். காலை பத்து பதினோறு மணிக்கு புத்தக கண்காட்சிக்குள் நுழைந்தால், மைதானத்தில் அண்டுகையிலேயே அச்சடித்த புத்தகங்களின் வாசம் வீசத்துவங்கிவிடும். எழுத்தை, புத்தகங்களை நேசிப்பவர்களுக்கு மட்டுமே கிக்கேற்றும் ஒரு வாசம் அது. புதிதாக வாங்கிய நூலையே பிரித்து வாசம் பார்க்கும் நமக்கு நம் பெயர் தாங்கிய நூலென்றால் கேட்கவா வேண்டும்? அதெல்லாம் ஒரு பரவசம். வார்த்தையில் விவரிக்க இயலா பரவசம். 

புத்தக கண்காட்சிக்கு இந்தியா வர முடியாத சூழல் இந்த முறையும். 

இந்த புத்தாண்டில் நடந்து கொண்டிருக்கும் புத்தக கண்காட்சியில் அந்த பரவசம் கிடைக்காதோ என்றிருந்த ஏக்கத்தை ஓரளவுக்கேனும் குறைக்கிறது இந்த புகைப்படங்கள். புகைப்படங்களை பகிர்ந்த தோழி அருணாவுக்கு எனது நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறேன்.