பிம்பங்களை மொழிபெயர்க்கும் வார்த்தைகள்
பிம்பங்களை மொழிபெயர்க்கும்
அசாத்திய வார்த்தைகளைத்
தேடிக்கொண்டிருக்கிறேன்...
பாதைகளில் இடரும் கற்களையொத்து
வார்த்தைகளுக்கமையும்
கடிவாளங்கள் பிம்பங்களுக்கின்றிப்
போதலில் மீந்துவிடும் அந்த
ஏதோவொன்றை என்னவென்று சொல்ல...
வார்த்தைகளைப் பிசைந்து,
ஓரமாய் நறுக்கி,
நடுவே குழைத்து,
முதுகில் தட்டி,
கன்னத்தில் கிள்ளி,
ஒருவழியாய் மொழிபெயர்த்துவிட்டேன்
ஒரு பிம்பத்தை...
சிந்திச்சிதறி சேதாரமான
வார்த்தைகள் ஒவ்வொன்றிலும்
ஏதேதோ பிம்பங்கள்
எட்டிப்பார்க்கின்றன....
#நன்றி
உயிர்மை கலை இலக்கிய இதழ்(http://uyirmmai.com/uyirosai/Contentdetails.aspx?cid=4917)
Monday, 24 October 2011
Subscribe to:
Posts (Atom)