என் ஆக்கங்கள் மீதான விமர்சனங்கள்

பிரபஞ்சத்தின் தினசரி டி.என்.ஏ குறிப்புகள்

Sunday, 1 February 2026

வாவ் சிக்னல் - விமர்சனம் - சுமித்ரா சத்யமூர்த்தி

 நீண்ட நாட்களாக அறிவியல் புனைவு வாசிக்கவில்லையே என்கிற ஒரு ஆதங்கம் தலைதூக்க, முகநூலில் தோழமைகள் பரிந்துரைத்த எழுத்தாளர் ராம் பிரசாத் அவர்களின் ஒன்றிரண்டு நூல்களை வாங்கியிருக்கிறேன்.

 அதில் முதலில் வாசித்தது #வாவ்_சிக்னல் 12 சிறுகதைகள் அடங்கிய தொகுப்பு.  அத்தனையும் சுவாரசியமான அறிவியல் புனைவு சிறுகதைகள். அதிலும்  இயற்கை விதிகளை புரிந்து அதை முன்பின்பாக மாற்றி  அவைகளுக்கு இடையான முரண்பாடுகளை எழுதி சுவாரசியமூட்டி இருக்கிறார்.

ஆழ்ந்த கருத்துகளோடும் எளிமையான விவரணங்களோடும் எழுதியிருக்கிறார் எழுத்தாளர். இந்த நூலில் என்னை பெரிதும் ஈர்த்தது ஆங்காங்கு அவர் தெளித்திருக்கும் மெய்யியல் சார்ந்த கருத்துருக்கள். அறிவியலும் மெய்யியலும் ஏதோ ஒரு புள்ளி ஒன்றுபடுகின்றன என்று சொல்வார்கள். இவருடைய ஒவ்வொரு கதையிலும் அதை நிகழ்த்திக் காட்டி இருக்கிறார். அதில் சில துளிகள்...

" நான் ஒரு முழுமையான, எல்லா சுகங்களும், ஆஸ்திகளும் கிடைக்கப்பெற்ற ஒரு வாழ்க்கைக்காக ஏங்கவில்லை. இந்த உலகின் முழுமையின்மைகளை, குறைகளை கடந்து போக அந்த குறைகளுடனே வாழ்ந்து மரித்துப் போக, கொஞ்சமே கொஞ்சம் அன்பு மட்டும்தானே கேட்கிறேன்."

"எவரின் கீழ்மையும் சரி செய்யும் வார்த்தைகள் உலகின் எந்த மொழியிலும் இல்லை எனும் போது இந்த புதிய உலகில் மட்டும் இருந்த விடவா போகிறது?"

 கீழ்மை செய்பவனின் மூளை அந்த கீழ்மைக்கு பழகி விடுகிறது. எல்லாவற்றிலும் கீழ்மயையே பார்க்கின்றன. கீழ்மையே தேடுகின்றன. நாளடைவில் அம்மூளைகளுக்கு மேன்மையோ, அதன் வாசமோ, அதன் போக்கோ, பிடிபடுவதே இல்லை"

"எது உன்னுடையது இல்லையோ, அது நீ எத்தனை முயற்சித்தாலும் உன்னுடையதாகப் போவதில்லை"

"எந்த அன்பையும் அக்கறையும் நீங்கள் மலைபோல் குவித்தாலும், அதற்கு எவ்வித நியாயத்தையும் வழங்கிடாதவர்களுக்கே தொடர்ந்து அந்த அன்பையும் அக்கறையும் வழங்கிக் கொண்டே இருப்பது செக்கு மாட்டுத்தனமா? கையாலாகாததனமா?"

"சூரியனைச் சுற்றிய 9 கிரகங்களின் விசைகள் தங்களுக்குள் சமரசம் செய்து கொண்டு சமன்படும் இடங்களில் தான் ஒவ்வொரு கிரகத்தின் இருப்பும் சாத்தியப்படுகிறதா? சமன்படுதலும் சமரசமும்தான் குடும்பம் என்கிற ஒருங்கிணைப்பின் மையமா?"

👌👌

விரைவில் முழு விமர்சனம்...