தற்காலச் சிறுகதைகள் தொகுப்புக்கென திரு.எஸ்.சங்கர நாராயணன் ஒரு சிறுகதை கேட்டு அணுகியபோது, எழுதி வெளியிடாமல் சுமார் 4 சிறுகதைகள் வைத்திருந்தேன். (இந்த எண்ணிக்கை இப்போது 9 ஆகிவிட்டது). அதில் இரண்டை எடுத்து அனுப்பினேன். இரண்டுமே அறிவியல் புனைவுகள் தான். அவர் தேர்வு செய்த சிறுகதை 'சோஃபி'.
பொதுவாக, தற்காலச் சிறுகதைகள் தொகுப்பு என்பது, அதன் காலத்தில் எழுதப்படும் சிறுகதைகளின் குறுக்குவெட்டுத் தோற்றத்தைக் கொடுப்பதாக அமையும். சிறுகதை என்கிற எழுத்து வடிவத்தை முயல்பவர்களுக்கும், பயிற்சிகள் மேற்கொள்பவர்களுக்கும், சமகால எழுத்தை உற்று நோக்குபவர்களுக்கும் இவ்வகையான தொகுப்புகள் வெகுவாகப் பயன்படும். நாம் கிணற்றுத் தவளையாக இருக்கிறோமா என்பதை சரிபார்த்துக்கொள்ள இது ஒரு நல்ல வழி.
அ.முத்துலிங்கம் | எஸ்.சங்கர நாராயணன் | இரா.முருகவேள் | காலத்துகள்
உள்பட இன்னும் சில எழுத்தாளர்களுடன் "மாசறு பொன்" சிறுகதைத் தொகுதியின் பக்கங்களைப் பகிர்ந்துகொள்வதில் மகிழ்ச்சி.
பிரதிகளுக்கு பதிப்பாளர் உதயகண்ணன்
அலைபேசி 94446 40986