என் ஆக்கங்கள் மீதான விமர்சனங்கள்

பிரபஞ்சத்தின் தினசரி டி.என்.ஏ குறிப்புகள்

Ram's works in global languages

மெட் செயலி - குறுநாவல்

தொலைக்காட்சிகளில்

தமிழ் விருதுகள்

English Awards

இலக்கிய இதழ்கள்

ஆனந்த விகடன்

குங்குமம் வார இதழ்

ராணி வார இதழ்

குமுதம் வார இதழ்

கல்கி

Thursday, 29 January 2026

ஜெருசலேம் பொறியியல் கல்லூரி - முன்னாள் / இன்னாள் மாணவர்கள் சந்திப்பு

ஜெருசலேம் பொறியியல் கல்லூரி - முன்னாள் / இன்னாள் மாணவர்கள் சந்திப்பு

**************************************************************

சற்றேரக்குறைய இருபதாண்டுகளுக்குப் பிறகு, என் கல்லூரி மாணவர்களிடம் பேசும் வாய்ப்பு கிட்டியது. எனக்கெல்லாம் அந்த வயதில், அப்துல் கலாமே வந்து பேசியிருந்தாலும், கவனம் இருந்திருக்காது.

கல்லூரி மாணவர்களுக்கு என்ன தேவை? வேலைவாய்ப்பு. அது தவிர ஏனைய எல்லாமும் இந்த வயதில் தேவையற்றதாகத்தான் நினைப்பார்கள். அதுதானே  நம் 'கலாச்சாரமும்'?!  இல்லையா?

அதற்காக, மாணவர்களுக்கு நம் அனுபவங்களைப் பகிராமல் இருக்க முடியுமா? யாருக்கேனும் பயன்படட்டும் என்று பகிர்வதுதானே இதெல்லாம். 

பெரும்பாலும் AI தான் பேசப்பட்டது. பிரதானமாகப் பார்க்கப்பட்டது. எல்லோரும் பேசியதும் அதைத்தான். 'உனக்கு என்ன பிடித்தமோ அது விளையாட்டோ, எழுத்தோ, ஓவியமோ அதிலும் சிறந்து வர, வருமானம் ஈட்ட, ஒரு முழு நேர வேலையாகக் கொள்ள இக்காலத்தில் வாய்ப்புகள் அதிகமாகியிருக்கிறது' என்று பேசியிருக்கிறேன். 

எத்தனை பேரைச் சென்றடைந்தது என்பதெல்லாம் இனி தான் தெரிய வரும். விதைகள் என்பது  தூவப்படுவதுதானே.