பலநூறு புத்தகங்களை வாசித்த தேர்ந்த இலக்கியவாதி இல்லை. சமூக சீர்திருத்தவாதியும் இல்லை.. மற்றவர் கருத்தை ஆராய்ந்து, அழகியல் குறை கண்டு எதிர்க்குரல் பதிவுசெய்யும் விமர்சகரும் இல்லை.
எழுத்தின் மீது தீராக்காதல். எழுத வேண்டும். புத்திசாலித்தனமாக எழுத வேண்டும். எழுதுவது யாருக்கேனும், எதற்கேனும் பயன்பட வேண்டும். இவ்வளவே நோக்கம்.
- எழுத்தாளர் ராம்பிரசாத் SFWA Member
என் ஆக்கங்கள் மீதான விமர்சனங்கள்
▼
பிரபஞ்சத்தின் தினசரி டி.என்.ஏ குறிப்புகள்
▼
தொலைக்காட்சிகளில்
▼
தமிழ் விருதுகள்
▼
English Awards
▼
இலக்கிய இதழ்கள்
▼
ஆனந்த விகடன்
▼
குங்குமம் வார இதழ்
▼
ராணி வார இதழ்
▼
குமுதம் வார இதழ்
▼
கல்கி
▼
Friday, 13 June 2025
மனிதத் தவறுகள்.
மனிதத் தவறுகள்.
*********************
குஜராத் விமான விபத்தில் மனிதத் தவறுகள் குறித்துப் பேசிக்கொண்டிருக்கிறார்கள்.
இந்தப் பத்தியும் ஒரு மனிதத் தவறு குறித்துத்தான்.
பிரேசிலில் "man of the hole" என்று ஒரு நபரை அழைத்திருந்தார்கள். அவர் ஒரு பழங்குடி இனத்தைச் சேர்ந்தவர். அவரது இனத்தில் அவர் தான் கடைசி. நவீன மனித இனங்களுடன் இணைந்து வாழ விரும்பாமல்,னிமையில் வாழ்வதையே அவர் விரும்பினாராம். ஆதலால், அவரைத் தொந்திரவு செய்ய வேண்டாம் என்று முடிவு செய்து அப்படியே விட்டுவிட்டார்கள். பிரேழில் காடுகளில் ஆறு அடிக்கும் ஆழமான குழிகள் வெட்டி அதனுள் வழிப்பாராம். அதனாலேயே 'man of the hole' என்று பெயர் வைத்திருந்திருக்கிறார்கள். கிடைத்ததை உண்பாராம். காட்டுக்குள்ளேயே திரிவாராம். இறுதியில், அவர் இறந்தபோது அவருக்கு அறுபது வயது ஆகியிருந்தது.
நவீன உலகின் கல்வி, மருத்துவம், ராணுவப் பாதுகாப்பு என்று எதுவும் இல்லாமலேயே அறுபது வயது வரை அவர் வாழ்ந்திருப்பது நமக்கெல்லாம் பாடம்.
அவரிடம் வேற்று கிரக மனிதர்கள் குறித்துக் கேட்டபோது தெரியாது என்று சொல்லிவிட்டாராம். பிறகு, வேற்று கிரக உயிர்கள் இப்படி இருக்கலாம் என்று நமக்கு இருக்கும் ஊகத்தைப் படமாக வரைந்து அவரிடம் காட்டியபோது, முகம் மலர்ந்து, "இவர் மன்குனாவாபு" என்றிருக்கிறார்கள்.
இதை வைத்து ஒரு கூட்டம் பூமியில் மனிதர்களுக்கு முன் வேற்று கிரக வாசிகள் வாழ்ந்திருக்கிறார்கள் என்று சொல்லிக்கொண்டிருக்கிறது. உண்மை அதுவாக இருக்க வேண்டியதில்லை தான். சரி, மனிதத் தவறு இதில் எங்கே என்று தானே கேட்கிறீர்கள்? 1700களில் பிரேசிலுக்குள் நுழைந்த போர்ச்சுகீஸியர்கள் போட்டுத்தள்ளியதில் தான் அப்போது பிரேசிலில் வாழ்ந்துகோண்டிருந்த பல பழங்குடிகள் அழிந்து போயின. பிற்பாடு, கிருத்துவத்தைப் பரப்பும் நோக்கில், அந்தப் பழங்குயினங்களின் மத நம்பிக்கைகளை, அது தொடர்பான ஆவனங்களை, கைவினைப்பொருட்களை எல்லாம் அழித்ததில், உண்மையைத் தெரிந்துகொள்ளும் எல்லா வாய்ப்புக்களையும் துப்புரவாக நவீன மனிதர்களே அழித்துவிட்டார்கள் என்பதுதான் அந்த மனிதத் தவறு.
இப்போது தாங்கள் தெரிந்தே அழிந்துவிட்டவைகளை மீண்டும் தெரிந்துகொள்ள மாங்கு மாங்கு என்று வானத்தில் தேடிக்கொண்டிருக்கிறோம். மனித இனத்தின் நவீனத்துவங்களில் பல, மனிதத் தவறுகளை மறைக்கும், மனிதத்தவறுகளால் நேர்ந்த இழப்புகளைச் சரிசெய்யும் முயல்வுகள் தாம்.
சரி. அந்த மன்குனாவாபு தான் என்ன என்று தானே கேட்கிறீர்கள்? பூமிக்கடியில் குழிகளுக்குள் வாழும் ராட்சத எறும்புகளைத்தான் அந்த பழங்குடி மனிதர் குறிப்பிடுகிறார் என்பதில் வந்து நிற்கிறது. This is the most conservative conclusion என்பது குறிப்பிடத்தக்கது. ஏன்? ஏனென்றால், விபரம் தெரிந்திருக்கக்கூடிய மற்ற பழங்குடிகளைத்தான் அழித்தாயிற்றே. அவர்களோடு சேர்ந்து அழிந்து போன உண்மைகளைத் தெரிந்துகொள்ள, இனி வரும் காலம் மனித இனம் பல்லாயிரம் கோடி டாலர்களை ஆராய்ச்சிகளுக்காக செலவு செய்ய வேண்டி இருக்கும்.
இத்தனைக்கும் பல இடங்களில் இனவழிப்பு திட்டமிட்டு நடப்பது கூட இல்லை. காட்டை அழித்து வீடு கட்டினால் இயல்பாகவே வீட்டைச் சுற்றி பூச்சிகள், ஊர்வன, பறப்பன போன்றவைகள் விலகிச்செல்வது போல, நவீன மனிதர்களில் பெருக்கத்தால் இயல்பாகவே வாழ்வாதாரம் குன்றி எளிமையான மனிதர்களின் அழிவு நடந்து விடுகிறது. சுருக்கமாகச் சொன்னால், எல்லாவற்றுக்கும் ஒரு விலை இருக்கிறது. இப்போதிருக்கும் உலகம் - அதிலுள்ள கஷ்டங்கள், சங்கடங்கள், துயரங்கள் எல்லாமும் நம் பெருக்கத்திற்கு நாம் தரும் விலை என்றால் அது மிகையில்லை.
பெருகுவானேன்? விலை தருவானேன்? But, I know, the world isn't there yet, not ready for the conversation yet.😞😞