இயல்பு
கொட்டும் மழையை
தாங்கித் தேக்கத்
துடிக்கின்றன இலைகள்...
இலைகளுள் நிரம்பித்
தளும்பி வழிகின்றன
மழைத்துளிகள்...
இந்த இலைகளே
இப்படித்தான்...
வெறுமனே
மழையை ரசிப்பதில்லை...
- ராம்ப்ரசாத் சென்னை (ramprasath.ram@googlemail.com)
#நன்றி
உயிர்மை கலை இலக்கிய இதழ்(http://www.uyirmmai.com/uyirosai/Contentdetails.aspx?cid=5195)
