கரிகாலம்
(ராம்ப்ரசாத்)
இனி வரப்போகும்
பெயரறியா மின்னிக்கென
காத்திருக்கின்றன சில கோட்பாடுகளும்,
தத்துவங்களும்…
பழையன தொலைத்துவிட்டு
புதியன புகும் நாழிகைகள் காலத்தை
மொழிபெயர்க்கத்துவங்கிவிட்டன…
கவனங்களின்றி சில
பிழைகளின் முகங்கள்
பூசிக்கொண்ட அரிதாரங்கள்
உரிந்துவிட்டது…
இயற்கை எக்காளமிட்டு
சிரிக்கிறது உரிந்த அரிதாரங்களின் மீது…
– ராம்ப்ரசாத் சென்னை (ramprasath.ram@googlemail.com)
#நன்றி
திண்ணை இணைய இதழ்(http://puthu.thinnai.com/?p=6689)
